தேசிய செய்திகள்

சோனியா காந்தியின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படை ஏற்றது

சோனியா காந்தியின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படை ஏற்றுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரது பிள்ளைகள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு வழங்கி வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பை திரும்பப்பெற்றது. அவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பிரிவின் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சோனியா காந்தி உள்பட 3 பேரின் வீடுகளிலும் நேற்று சி.ஆர்.பி.எப். கமாண்டோக் கள் நவீன துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சிறிது காலத்துக்கு அவர்களுக்கு எஸ்.பி.ஜி. குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி செய்வார்கள். அதன் பின்னர் மத்திய போலீஸ் படையினர் தனித்து செயல்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்