தேசிய செய்திகள்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி: பிரதமர் மோடி

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஒகி புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லட்சதீவு, தமிழகத்தில் கன்னியாகுமரி, மற்றும் கேரளாவிற்கு சென்று ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி டெல்லி திரும்பிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், புயலால் முழுமையாக பாதிப்படைந்த 1400 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும் எனவும் புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...