தேசிய செய்திகள்

உலக சுற்றுலா தினம்: தனி செயலியை அறிமுகப்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாவிற்கென ஒரு தனி செயலியை அறிமுகப்படுத்தினார்.

தினத்தந்தி

டெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தெக்கோ ஹமாரி டெல்லி என பெயிரிடப்பட்டுள்ள ஒரு மொபைல் செயலியை உலக சுற்றுலா தினத்தன்று அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலி மூலம் டெல்லியில் உள்ள சுற்றுலா தலங்கள், பிரபலமான உள்ளூர் உணவு வகைகள், பாரம்பரிய இடங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

டெல்லிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். உங்களின் சுற்றுலா அனுபவத்தை இது மேம்படுத்தும்.

டெல்லி ஒரு வரலாற்று மற்றும் நவீன நகரம் மேலும் அது வழங்குவதற்கு எல்லாவற்றையும் கொண்டுள்ளது. நல்ல உணவு, சந்தைகள் முதல் நினைவுச்சின்னங்கள் வரை. இல்லாத ஒரே விஷயம் அது குறித்த தகவல்கள். இப்போது இந்த மொபைல் செயலி மூலம் அந்த தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

இது உங்களுக்கு அருகில் 5 கிமீ சுற்றளவுக்குள் உள்ள வேடிக்கை பூங்காக்கள், உணவகங்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் பொது வசதிகள் ஆகியவற்றைக் காட்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல டெல்லிவாசிகளுக்கும் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுற்றுலாத் துறையின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் டெல்லி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எங்கள் அரசு முயற்சிக்கிறது. இப்போது சுற்றுலாப் பயணிகள் தங்கள் முழுமையான பயணத்தை ஒரு செயலி மூலம் திட்டமிடலாம் இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு