தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சி வலிமை அடைய வேண்டும்; நிதின் கட்காரி விருப்பம்

வலிமையான காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு அவசியம் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டபின்னர் பேசும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற இரண்டு சக்கரங்களை கொண்டு ஜனநாயகம் இயங்கி வருகிறது.

ஒரு வலிமையான எதிர்க்கட்சி ஜனநாயகத்திற்கு தேவையாக உள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சி வலிமை அடைய வேண்டும் என்பதே எனது உண்மையான விருப்பம்.

காங்கிரஸ் கட்சி பலவீனமுற்றால், மாநில கட்சிகள் அந்த இடத்தினை நிரப்பி விடும். அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அதனால், எதிர்க்கட்சி வலிமையாக இருக்க வேண்டும்.

இதற்கு நேரு ஓர் எடுத்துக்காட்டு. வாஜ்பாய் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தபோதும், நேரு அவருக்கு உரிய மதிப்பை வழங்கினார். ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக முக்கியம் என கூறியுள்ளார்.

சமீபத்திய தேர்தலில் காங்கிரசின் தோல்வியை குறிப்பிட்டு அவர் பேசும்போது, தோல்விகளால் துவண்டு போக கூடாது. கட்சியுடனேயே இருக்க வேண்டும். தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் தலைவர்களையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் என்ற பா.ஜ.க.வின் நிலைப்பாடு மற்றும் அக்கட்சி தலைவர்கள், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பிற இடங்களில் இதனை கூறிவருவது ஒருபுறம் இருக்க கட்காரி பேசியிருப்பது கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு