தேசிய செய்திகள்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கி வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி, சேவா பவனில் மத்திய நீர்வளத்துறை ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்