தேசிய செய்திகள்

அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வாபஸ்; மேற்கு வங்காள அரசு அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுகின்றன என்றாலும், சுகாதார விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என்று அரசு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பரவலை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதன்படி, பொது இடங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இவற்றை கடுமையாக கடைப்பிடிக்கவும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவும் தொடர்ந்தது.

எனினும், சமீப காலங்களாக நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெருமளவு குறைந்து உள்ளன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்காளத்தில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.

எனினும், அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பொது இடங்களில் தூய்மையை கடைப்பிடித்தல் ஆகிய சுகாதார விதிகளுக்கான அறிவுறுத்தல் தொடரும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவை கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்