தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் - மாயாவதி கோரிக்கை

ஏழைகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

லக்னோ,

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளைப் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தருணத்தில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவருமான மாயாவதி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியை ஒரு தேசிய கொள்கையாக மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும். ஏழைக்குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் கேட்டுக்கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி