புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் (1.87%) மிகவும் குறைவாக உள்ளது. மேலும் உலகிலேயே குணமடைந்தவர்கள் விகிதம் (75%) நமது நாட்டில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தற்போது சுமார் 1500 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. இது ஒரு பெரிய சாதனையாகும்.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசி உருவாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.