தேசிய செய்திகள்

பண்ணை வீட்டில் நடன அழகிக்கு நேர்ந்த கொடுமை... 10 பேர் கும்பலை தேடும் போலீஸ்

உத்தர பிரதேசத்தில் பண்ணை வீட்டில் நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு நடன அழகியை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் நடந்துள்ளது.

தினத்தந்தி

கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் பித்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் தேவா சர்தார். தனது பண்ணை வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதற்கு வரும்படி தொழில்முறை நடனம் ஆடும் பெண் ஒருவரை அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நடனம் ஆட என மேடை எதுவும் இல்லை. இதனால், அவரிடம் அந்த பெண் வாக்குவாதம் செய்துள்ளார்.

அந்த பெண்ணிடம் பண்ணை வீட்டின் அறை ஒன்றில் நடனம் ஆடும்படியும், நிறைய பணம் கிடைக்கும் என்றும் தேவா கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார். நடனம் ஆடிய களைப்பில் இருந்த பெண்ணுக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதனை வாங்கி குடித்தவுடன் அந்த பெண் மயக்கமடைந்து உள்ளார். இதன்பின்பு, அவரை தேவா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோவும் எடுத்து வைத்து உள்ளார்.

தேவாவுடன் கூட்டாளிகள் என 10 பேர் இருந்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின் வீடியோவை வெளியே விடுவேன் என அந்த பெண்ணை தேவா மிரட்டியும் உள்ளார். எனினும் பர்ரா காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தீனாநாத் மிஷ்ரா கூறியுள்ளார். தேவா சர்தார், மொகித் மற்றும் சோபித் மற்றும் 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்