தேசிய செய்திகள்

மாநிலங்கள் தொடங்கப்பட்ட தினம்: கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

மாநிலங்கள் தொடங்கப்பட்ட தினத்தையொட்டி கேரள, கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களும், லட்சத்தீவு யூனியன் பிரதேசமும் தொடங்கப்பட்டன. இதையொட்டி, அந்த மாநிலங்களின் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டுக்கு கேரள மக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கர்நாடக மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முன்னேற்றத்துக்கு கர்நாடக மக்கள் பிரமாதமான பங்களிப்பை செய்துள்ளனர். கர்நாடகாவின் இயற்கை அழகும், மக்களின் பரந்த மனப்பான்மையும் அனைவரும் அறிந்ததுதான். இனிவரும் காலங்களில் கர்நாடகாவின் வளர்ச்சிக்காக வேண்டுகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

அரியானா, மத்தியபிரதேசம் ஆகிய மாநில மக்களுக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், அரியானா, பஞ்சாப் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு