தேசிய செய்திகள்

இலாகா பறிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியுடன் சித்து சந்திப்பு

இலாகா பறிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியை, நவ்ஜோத்சிங் சித்து நேற்று சந்தித்தார்.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதில் மந்திரியாக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும், முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

சமீபத்தில் நடந்த மந்திரிசபை மாற்றத்தில், சித்து வசம் இருந்த உள்ளாட்சி, சுற்றுலா, கலாசாரம் ஆகிய முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டன. அவற்றுக்கு பதிலாக மின்துறை அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சித்து, கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சித்து சந்தித்தார். இத்தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் உள்ள நிலவரத்தை விளக்கி ஒரு கடிதம் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்