புதுடெல்லி,
நாடு இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சியை தங்கள் ஆட்சிக்காலத்தில்தான் கண்டுள்ளது என்று பாரதீய ஜனதா கட்சி கூறுகிறது.
ஆனால் இதை முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் குறிப்பிடும்போது, நிதி ஆயோக் தந்துள்ள போலியான புள்ளி விவரத்தை அடிப்படையாக கொண்டதுதான் பாரதீய ஜனதா கட்சி கூறுகிற பொருளாதார வளர்ச்சி புள்ளி விவரம். இதை ஒவ்வொரு பொருளாதார நிபுணரும், புள்ளி விவர வல்லுனரும் நிராகரிப்பார்கள் என கூறி உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் (2004-2009) சுதந்திரத்துக்கு பின்னர் மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.