தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

மராட்டியத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துவிட்டது.

தற்போது மாநிலத்தில் ஏறக்குறைய இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர். மும்பையை பொறுத்தவரை மின்சார ரெயில் போக்குவரத்தை தொடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கிவிடும். முககவசம் அணிதல், கூட்டமாக பொது இடங்களுக்கு செல்ல கூடாது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை நீட்டித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று மாநில அரசு பிறப்பித்து உள்ளது. இதேபோல கடைகள் இரவு 11 மணி வரையும், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரையும் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...