டார்ஜிலிங்,
பெம்பாவின் தலைமையில் மலையேற்ற குழு ஒன்று கொல்கத்தாவில் இருந்து இமய மலைப்பகுதியில் உள்ள 7,672 மீட்டர் உயரம் கொண்ட சாசர் காங்ரி சிகரத்துக்கு கடந்த மாதம் 20ந் தேதி பயணம் மேற்கொண்டது. சில வாரங்களுக்கு பின்பு இந்த குழு சாசர் காங்ரியில் ஏறிய பின்பு அங்கிருந்து கீழே இறங்கியது.
அப்போது பெம்பா மட்டும் திடீரென மாயமானார். அவருடைய கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர் பனிப்பிளவுக்குள் சிக்கிக்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மலையேற்றத்தில் அனுபவம் மிக்கவரான தனது கணவரிடம் இருந்து கடந்த 13ந் தேதிக்கு பின்பு இதுவரை எந்த தகவலும் இல்லை. என்றபோதிலும் தனது கணவரை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பெம்பாவின் மனைவி நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலை முதல் திபெத்திய போலீசார் பெம்பாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.