புதுடெல்லி,
மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மந்திரியாக பதவி வகிப்பவர் உமா பாரதி. உமா பாரதியின் நெருங்கிய உதவியாளர் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாகவே உமா பாரதி முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு தாங்க முடியாத அளவிற்கு கடும் மூட்டு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல் நிலை நன்றாக உள்ளது. மூட்டு வலியை குணப்படுத்துவதற்கு தேவையான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.