புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதா நிறைவேறியது. முன்னதாக, மூன்றரை மணி நேரமாக நடந்த விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று அவர் கூறியதை ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.