ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா, ஸ்கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லாவிடம், தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததுடன், உயர்தர சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.