தேசிய செய்திகள்

கொரோனாவுடன் மனித இனம் இன்னும் போராடி கொண்டிருக்கிறது; ஜனாதிபதி உரை

கொரோனாவுடன் மனித இனம் இன்னும் போராடி கொண்டிருக்கிறது என ஜனாதிபதி தனது உரையில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் 73வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றி வருகிறார்.

அவர் பேசும்போது, நமது ஜனநாயகத்தின் பன்முக தன்மை மற்றும் துடிப்பு ஆகியவை உலக அளவில் பாராட்டை பெற்றுள்ளது. இதுவே ஒற்றுமையின் உணர்வு மற்றும் ஒரு நாடாக இருந்து ஆண்டுதோறும் குடியரசு தினத்தினை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டின் கொண்டாட்டங்கள் பெருந்தொற்றால் முடக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் உணர்வு எப்போதும் வலிமை வாய்ந்தது என ஜனாதிபதி தனது உரையில் கூறியுள்ளார்.

இந்த தருணத்தில், சுயராஜ்யம் என்ற தங்களது கனவை தொடர, ஒப்பிட முடியாத அளவிலான தைரியத்தினை வெளிப்படுத்தியதுடன், அதற்காக போராட மக்களையும் உத்வேகப்படுத்திய நம்முடைய மிக சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களையும் நாம் நினைவு கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, இந்த உலகம் தற்போது உள்ளதுபோல் மிக அதிக உதவி தேவைப்படும் நிலைக்கு, முன்பு ஒருபோதும் இருந்தது இல்லை. 2 ஆண்டுகள் கடந்து விட்டன. மனித இனம் கொரோனாவுடன் இன்னும் போராடி கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். உலக பொருளாதாரமும் அதன் பாதிப்பில் சிக்கி உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத துன்பத்தினால் உலகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மனித குலத்திற்கு மிக பெரிய சவாலாக உள்ளது. புதிய வகை கொரோனாவால் புதிய நெருக்கடிகள் உண்டாகின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்