தேசிய செய்திகள்

முழுஅடைப்பால் மக்களின் உரிமைகள் பாதிப்பு: ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு

முழுஅடைப்பால் மக்களின் உரிமைகள் பாதித்ததாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற முழுஅடைப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் மாநிலம் மோரிகான் சாதர் போலீஸ் நிலையத்தில் சஹாய் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராஜு மகந்தா புகார் கொடுத்தார்.

அதில், முழு அடைப்பால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு காரணமான ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார். அதன்பேரில், போலீசார் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். அசாமில் வேலைநிறுத்தங்களை சட்ட விரோதமானது என்று கவுகாத்தி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருப்பதால், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு