தேசிய செய்திகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் - புதிய அரசுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் வேண்டுகோள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என புதிய அரசுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் சில வேண்டுகோள்களை விடுத்து உள்ளார்.

இது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. எனவே இந்த துறைகளுக்கு புதிய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய திட்டங்கள் மூலம் இஸ்ரோவில் சில பணிகள் நடைபெறுவது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் நாட்டுக்கு அதிக தொடர்புடைய ராணுவ ஆய்வு, அணுசக்தி, விவசாய மற்றும் மருத்துவ ஆய்வு துறைகள் தொடர்ந்து அமைதியாக இருக்கின்றன? பணிகள் எதுவும் வெளிப்படையாக இல்லையென்றால், பணிகள் நடைபெறவில்லை என்றே அர்த்தமாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த துறைகள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறிய மாதவன் நாயர், ஆய்வுத்துறைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அறிவியல் கவுன்சிலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை