தேசிய செய்திகள்

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படுகிறது என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

வங்கிக் கடன் தவணை காலத்தில் வட்டிக்கு, வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் வங்கி கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்றும் தெரிவித்தது. மத்திய அரசின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக வட்டிக்கு வட்டி செலுத்தும் விவகாரத்தில் இன்று முடிவு அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு