தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது, உக்ரைன் போர் மற்றும் கொரோனா காரணமாக, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்து, இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு, இரு கட்டங்களாக, ஓராண்டுக்குள் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று, மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, உக்ரைன் போர் காரணமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்து இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு, இந்தியாவில் இரண்டு தவணைகளில் தேர்வு எழுத அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்