தேசிய செய்திகள்

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு சட்டசபை கடந்த 19-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.

பெங்களூரு விதான சவுதாவில் கூடும் இந்த கூட்டத்தில் இன்று முதல் துறை வாரியாக விவாதம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீது விவாதம் நடக்கிறது. அதற்கு சம்பந்தப்பட்ட துறை மந்திரி பதிலளிக்க உள்ளார். பெரிய துறைகளுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 26-ந் தேதி பதிலளிக்க உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்