தேசிய செய்திகள்

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில், ரூ.20 லட்சத்துக்கு மேல் மதிப்புடைய சொகுசு கார்களை பதிவு செய்ய 20 சதவீதம் மோட்டார் வாகன வரி செலுத்த வேண்டும்.

தினத்தந்தி

கொச்சி,

பிரபல நடிகை அமலா பால் இந்த வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரியில் தனது சொகுசு காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் அமலா பால் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு, நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு, வருகிற 15ந் தேதி அமலா பால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்