தேசிய செய்திகள்

ரெயிலில் அடிபட்டு சிறுத்தை செத்தது

தொட்டப்பள்ளாப்புராவில் ரெயிலில் அடிபட்டு சிறுத்தை செத்தது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா அருகே கல்லுநாயக்கனஹள்ளி பகுதியில் தண்டவாளம் அருகே சிறுத்தை ஒன்று செத்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அதுகுறித்து விசாரித்தனர். விசாரணையில், மகாலி வனப்பகுதிக்குள் இருந்து இரை தேடி வந்த சிறுத்தை அந்த வழியாக சென்ற ரெயில் மோதி செத்தது தெரியவந்தது.

மேலும், அந்த சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் என வனத்துறையினர் கூறினர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்த சிறுத்தையின் உடல் அருகில் உள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்