தேசிய செய்திகள்

லோக்பால் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் இயங்கும் - அதிகாரிகள் அறிவிப்பு

லோக்பால் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் இயங்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் நாட்டின் முதலாவது லோக்பாலுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதர 8 உறுப்பினர்களுக்கு மார்ச் 27-ல் அதன் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தலைவர், 8 உறுப்பினர்கள், ஊழியர்கள் அடங்கிய லோக்பால் அலுவலகம் டெல்லி சாணக்யபுரியில் உள்ள அசோகா ஓட்டலில் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அது தற்காலிக அலுவலகமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அசோகா ஓட்டல் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசு ஓட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்