தேசிய செய்திகள்

சூனியக்காரி பட்டம் சூட்டி மூதாட்டியை அடித்து, தீ வைத்து கொளுத்திய நபர்

ஜார்க்கண்டில் சூனியக்காரி என கூறி மூதாட்டியை அடித்து, துன்புறுத்தி, தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

தினத்தந்தி

சிம்டெகா,

ஜார்க்கண்டின் சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60). கடந்த புதன்கிழமை இவர், புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்து கொண்டார்.

இந்த விருந்து முடிந்தவுடன், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து மூதாட்டியை அடித்து, துன்புறுத்தியுள்ளனர்.

இதன்பின்பு, ஒரு கட்டத்தில் ஜாரியோ மீது தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சூழ்ந்திருந்த கிராமவாசிகள் அவரை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் புளோரன்ஸ் மற்றும் 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்