தேசிய செய்திகள்

சிறுமியை நிர்வாணப்படுத்தி மிரட்டியவர் கைது

கொப்பல் மாவட்டத்தில் சிறுமியை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

கொப்பல்:-

சிறுமி

கொப்பல் மாவட்டம் கங்காவதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு சிறுமி தனது தந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தாள். அப்போது சிறுமிக்கும், முஸ்தபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே முஸ்தபா, சிறுமியை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து கொண்டார்.

கைது

பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி உள்ளார். இதை பொறுத்து கொள்ள முடியாத சிறுமி இதுகுறித்து பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக முஸ்தபாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து