ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியை பக்ரூ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.
அதன்பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். 17 வயது டீன் ஏஜ் சிறுமியை காணாமல் பெற்றோர் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார். இதனையடுத்து, கர்தானி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
அந்த கைதிக்கு எதிராக இதே சிறுமி அளித்த புகாரின் பேரில் 2 கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து அதே சிறுமியிடம் மீண்டும் பாலியல் வன்கொடுமையில் அந்நபர் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. முந்தின வழக்கில் அந்த நபரை போலீசார் கைது செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.