தேசிய செய்திகள்

இரட்டை குழந்தைகளின் பெயர் ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’

உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த இரட்டை குழந்தைளுக்கு ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மீரட்,

கொரோனா வைரஸ் பலிகளும், பாதிப்புகளும், ஊரடங்கு சிக்கல்களும் தொடரும் இந்த நேரத்தில் சில விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு தாய் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு குவாரண்டைன் மற்றும் சானிடைசர் என்ற பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, இந்த இரண்டு பெயர்கள், கொரோனா வைரசுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் முக்கிய விஷயங்களாகும். இதுதான் சிறந்த பெயர்களாக இருக்க முடியும் என்று எங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தேர்வு செய்தோம். அதனால்தான் எங்கள் ஆண் குழந்தைகளுக்கு இந்த பெயரையே சூட்டியுள்ளோம் என்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?