தேசிய செய்திகள்

நாட்டில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 137.46 கோடியாக உயர்வு

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 137.46 கோடியை கடந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்களும் அதற்கான முகாம்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 137,46,13,252 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, கடந்த 24 மணிநேரத்தில் 76,54,466 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 7,081 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 83,913 ஆக உள்ளது.

கடந்த 1.5 ஆண்டுகளில் இது மிக குறைவாகும். 570 நாட்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு