மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவிவருகிறது.
இந்தியாவில் மராட்டியத்தில் மட்டும் 7628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 47.6 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மராட்டியத்தில் புதிதாக 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,068 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மராட்டியம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.