புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 76.49 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 57,10,380 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று மாலை 7 மணிவரை மொத்தம் 76,49,36,158 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதன்படி 18 முதல் 44 வயது வரையில் உள்ளவர்கள் - முதல் தவணை - 30,87,70,934, இரண்டாம் தவணை - 4,87,22,784
45 முதல் 59 வயது வரையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 14,61,56,251, இரண்டாம் தவணை - 6,49,46,700
60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்: முதல் தவணை - 9,44,61,804, இரண்டாம் தவணை - 5,03,32,329
சுகாதாரத்துறையில் உள்ளவர்கள்: முதல் தவணை - 1,03,65,571, இரண்டாம் தவணை - 86,39,913
முன்களப் பணியாளர்கள்: முதல் தவணை - 1,83,40,244, இரண்டாம் தவணை - 1,41,99,628