தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடும், 3-வது இடத்தில் டெல்லியும் உள்ளன.

இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு இன்று புதிதாக 1,359 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,004 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 22 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலியானோரின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 9,898 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு