தேசிய செய்திகள்

4 கோடியாக இருந்த கழுகுகள் எண்ணிக்கை 19 ஆயிரமாக சரிவு

4 கோடியாக இருந்த கழுகுகள் எண்ணிக்கை தற்போது 19 ஆயிரமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார். அப்போது அவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் 4 கோடி என்ற அளவுக்கு இருந்த கழுகுகளின் எண்ணிக்கை, தற்போது 19 ஆயிரமாக குறைந்து விட்டது என கூறினார்.

கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது முதலில் 1990-களின் மத்தியிலும், பின்னர் 2007-ம் ஆண்டிலும் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அளவில் கழுகுகளின் எண்ணிக்கையை, பி.என்.எச்.எஸ். என்று அழைக்கப்படுகிற பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வருவதாகவும், இதற்கான ஆதரவை மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்