ஜான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங் படேல். டாக்டரான இவர் அதே பகுதியில் குழந்தைகள் நல மருத்துவமனையை நடத்தி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையின் 3-வது தளத்தில் உள்ள ஓய்வு அறையில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் டாக்டர் சிங் படேலை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.