தேசிய செய்திகள்

கச்சா எண்ணெய் விலையை நியாயமாக நிர்ணயிக்க வேண்டும்; எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் பீப்பாய்க்கு 75 டாலராக உயர்ந்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி விட்டது.

இந்தநிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் வளர்ச்சி பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை மிகவும் சவாலாக இருக்கிறது. அதன் விலையை நியாயமானதாக நிர்ணயிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாட்டு நண்பர்களை பல தடவை வற்புறுத்தி விட்டேன். ஓபெக் (எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு) கூட்டம், ஜூலை 1-ந்தேதி (நாளை) நடக்கிறது. அதில், விலை சற்று குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...