தேசிய செய்திகள்

பெங்களூரு மாநகராட்சி தோதலை நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்க வேண்டும்- தேர்தல் ஆணையம் உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையில், மாநகராட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையின் போது, பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஒரு வாரத்தில் வார்டு இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த பணிகள் நிறைவு பெற்றால், இன்னும் 2 மாதத்திற்குள் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால் வார்டு இடஒதுக்கீட்டை ஒரு வாரத்திற்குள் முடிக்க முடியாததால், சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் மாநகராட்சி தேர்தல் தள்ளி போக வாய்ப்புள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிக்க...

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்காகவும், வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், மாநகராட்சியில் உள்ள 243 வார்டுகளுக்கும் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. பின்னா செப்டம்பர் 22-ந் தேதிக்குள் இறுதி வாக்காளா பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் என்றும். இதில், ஏதேனும் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முழுப் பொறுப்பு என்றும் தோதல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்