தேசிய செய்திகள்

விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக்கொள்வதிலும், தன் இருப்பைக் காட்டிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறது. அந்த வகையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி போராடியது.

அதே பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டார். மேலும் டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...