தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.18% ஆக உயர்வு

கொரோனா மாதிரி பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணிநேரத்தில் சற்று உயர்ந்து உள்ளது. புதிதாக 45,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று 43,733 ஆக இருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.18% ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் மொத்த சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.50% என்ற அளவில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.18% ஆக உயர்ந்துள்ளது.

வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5%க்கு கீழ் குறைந்து 2.37% என்ற அளவில் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம், தொடர்ச்சியான கடந்த 17 நாட்களில் 3%க்கு கீழ் குறைந்து 2.42% என்ற அளவில் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கொரோனா மாதிரி பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுவரை மொத்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 42.52 கோடியாக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை