தேசிய செய்திகள்

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புதல்

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒப்புக் கொண்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் இடதுசாரி முன்னணி படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இடதுசாரிகளால் வெற்றி பெற முடிந்தது. எனவே இந்த தோல்வி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.

இந்த அறிக்கை சமீபத்தில் நடந்த கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானியில் வெளியாகி இருக்கிறது. அதில் கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்