புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.