அகர்தலா,
திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தில் கொனாபன் பகுதியில் 5வது பட்டாலியனில் வீரர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில், சக வீரர்களை நோக்கி மற்றொரு வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின் அந்த வீரர் சரண் அடைந்து உள்ளார். முதல்-மந்திரி பிப்லப் தேவ் உயிரிழந்துள்ள வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.