தேசிய செய்திகள்

மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்றும் : கவர்னர் வித்யாசாகர் ராவ்

மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்ற உள்ளதாக கவர்னர் தெரிவித்தார். #Vidyasagarrao

தினத்தந்தி

மும்பை,

மகாராஷ்டிரா ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்ற உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சட்டசபையில் உரையாற்றினார் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

விவசாயம், ஜவுளி, சுற்றுலாதுறைகளில் அதிகரித்துவரும் வளர்ச்சிக்கு இது உதவும் , உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளது என்றும் ஜி.எஸ்.டி.பி ஆனது 2016-17-ல் 8.5 சதவீதம் மற்றும் 2015-16-ல் 9.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், பொது உள்கட்டமைப்பை அதிகரிக்கும் விதத்தில் கணிசமான மாநில பட்ஜெட் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வது மற்றும்,அரசாங்கத்தின் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்துவது, உள்கட்டமைப்பின் தலைமையிலான வளர்ச்சி கொள்கைகளை மீண்டும் தொடர உதவும் என்று ராவ் தெரிவித்தார்.

மேலும் நெருக்கடி நிறைந்த விவசாயத் துறை மாநில அரசின் மரபுரிமை. 2012-13 ஆம் நிதியாண்டில் 0.5 சதவீதம் குறைவான எதிர்மறையான வளர்ச்சியில் இருந்து 2016-17-ல் வளர்ச்சி விகிதம் 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-18ல் இந்த வேகம் நீடிக்கும். அதிக முதலீடு செய்வதன் மூலம் விவசாயம் துறை இந்த வளர்ச்சி அடைந்தது என்றும் 2013-14 ஆம் ஆண்டில் 29,000 கோடியிலிருந்து 2017-18ல் ரூ. 83,000 கோடிக்கு 280 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2025 க்குள் மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்