தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உடல்நல குறைவால் காலமானார்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மோகன் சந்தான கவுடர் உடல்நல குறைவால் காலமானார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் மோகன் சந்தான கவுடர் (வயது 63). இவர் நீண்டகாலம் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) அவர் காலமானார்.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட அவர், அதற்கு முன் கேரள ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

கர்நாடக மாநில பார் கவுன்சிலில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை துணை தலைவராக பதவி வகித்த அவர், பின்னர் கடந்த 1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.

அவர், கர்நாடக ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதுடன், நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆவார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...