புதுடெல்லி,
தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், பொதுச்செயலாளர் மகேஸ்வரன் தலைமையிலும் 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் தமிழக வியாபாரிகள் மந்திரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அப்போது கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன் (நெல்லையை சேர்ந்தவர்), தான் வாங்கி சென்ற திருநெல்வேலி அல்வாவை மந்திரிக்கு வழங்கினார். அதைப்பார்த்து மற்ற வியாபாரிகள், மந்திரிக்கே அல்வாவா என்று கிண்டலாக சிரித்து கொண்டனர்.
மந்திரியிடம் வியாபாரிகள் அளித்த அந்த கோரிக்கை மனுவில், 2014ம் ஆண்டின் சாலையோர வியாபாரிகள் சட்டத்தை தமிழ்நாட்டில் முழுமையாக அமல்படுத்த வேண்டும், சாலையோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.