தேசிய செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதிப்பு

பங்குகள் ஒதுக்கீட்டில் விதிமுறையை மீறி செயல்பட்டதாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்தது.

தினத்தந்தி

மும்பை,

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி 2016ம் ஆண்டு ஏப்ரல் 21ந் தேதி பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக குழு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விதிமீறல் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய வழிமுறைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பின்பற்ற தவறியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் பிரிவுகள் 47 ஏ (1) (சி) உடன் இணைந்த பிரிவுகள் 46(4) (1)ன் படி தண்டனைக்குரிய குற்றம் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தது.

அதன்படி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு