புதுடெல்லி,
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அமைப்பாக பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக, இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.
இந்நிலையில், என்ஜினீயரிங் கல்வியை ஒழுங்குப்படுத்தும் உயரிய அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலையும் (ஏ.ஐ.சி.டி.இ.) கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக உருவாக்கப்படும் இந்திய உயர் கல்வி ஆணையம், இனிமேல், யு.ஜி.சி.யின் பணிகளையும், ஏ.ஐ.சி.டி.இ.யின் பணிகளையும் கவனிக்கும். என்றார்.