தேசிய செய்திகள்

ஆட்சி மாற்றத்துக்கு தருணம் வந்து விட்டது: மோடி மீது சத்ருகன் சின்கா பாய்ச்சல்

ஆட்சி மாற்றத்துக்கு தருணம் வந்து விட்டது என சத்ருகன் சின்கா, மோடியை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

முன்னாள் மத்திய மந்திரியும், பீகார் மாநிலம், பாட்னாசாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, பா.ஜனதாவில் அதிருப்தியாளராக உள்ளார். பிரதமர் நரேந்திரமோடியையும், பா.ஜனதா கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியை நேரடியாக சாடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாகி விட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான, உகந்த நேரம் வந்தாகி விட்டது; புதிய, சிறந்த தலைமை வரவேண்டும் என்று நீங்கள் நினைக்க வில்லையா? நீங்கள் உங்களின் அனைத்து கருப்பு, வெள்ளை, சாம்பல் நிற பக்கங்களுடன் வெளியே வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு