தேசிய செய்திகள்

இயற்கை விவசாய முறைக்கு மாறும் நேரம் வந்து விட்டது; பிரதமர் மோடி உரை

நம்முடைய சுற்றுச்சூழலை காக்க இயற்கை விவசாய முறைக்கு மாறும் நேரம் வந்து விட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத்தில் நடந்த இயற்கை விவசாயம் சார்ந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாற்றினார். அவர் பேசும்போது, கடந்த 7 ஆண்டுகளில், இந்திய விவசாய துறையை தொழில்நுட்பத்துடன் இணைந்து நவீனமயம் ஆக்குதல் மற்றும் இயற்கை அன்னையை காக்க ஆர்கானிக் (கரிம பொருட்கள்) சார்ந்த வழிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

நம்முடைய சுற்றுச்சூழலை காக்க விவசாய துறையில், ரசாயன ஆய்வக பரிசோதனைகளில் இருந்து இயற்கை விவசாய முறைக்கு நம்முடைய கவனம் மாறும் நேரம் வந்து விட்டது. எனவே, ரசாயன ஆய்வகத்தில் இருந்து வேளாண்மையை வெளியே கொண்டு வந்து, இயற்கை ஆய்வகத்தில் அதனை இணைக்க வேண்டும்.

இயற்கை ஆய்வகம் என நான் கூறுவது, முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது என்று கூறியுள்ளார். புதிய வழிமுறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலன்களை கொண்டு வருவதற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்